செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் மார்க்ஸ்சிஸ்ட் கம்யூ.கட்சி சார்பில் பொதுகூட்டம்

Published On 2018-08-15 16:45 GMT   |   Update On 2018-08-15 16:45 GMT
ஜெயங்கொண்டத்தில் மார்க்ஸ்சிஸ்ட் கம்யூ.கட்சி சார்பில் பொதுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் ஜெயங்கொண்டம் உட்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உட்கோட்டை கிளை செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். ரமேஷ், முத்துசாமி, குருநாதன், தியாகராஜன்,  காமராஜ், மீனா ஆகியோர்முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில்  மாவட்டசெய லாளர் மணிவேல்,ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மகாராசன், இளங்கோவன், ஒன்றியக் குழு உறுப்பினர் உத்திராபதி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன் கோரிக்கைகள் பற்றி  பேசினார். 

கூட்டத்தில் உட்கோட்டை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக  நிரப்ப வேண்டும், ஜெயங்கொண்டம் பகுதியில் மீத்தேன் திட்டங்களை கைவிடக்கோரியும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முதல் கட்ட நிதியாக ரூ.32 ஆயிரத்து500 யை  மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலனிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில்  நிர்வாகிகள் புகழேந்தி, மனோகரன், கெங்காசலம், இளைய பெருமாள், மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
   
இடைக்கட்டு கிளை செயலாளர் அன்பழகன் வரவேற்றார். முடிவில் புகழேந்தி நன்றி கூறினார்.
Tags:    

Similar News