செய்திகள்

கள்ளத்தொடர்பு அம்பலமானதால் வி‌ஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி

Published On 2018-08-07 09:52 GMT   |   Update On 2018-08-07 09:52 GMT
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கள்ளத்தொடர்பு ஊருக்கு தெரிய வந்ததால் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தனர்.
காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம் அனுமந்தபுரம் அருகே உள்ள எலுமிச்சன அள்ளியை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 45). டேங்க் ஆபரேட்டரான இவருக்கு ருக்மணி என்ற மனைவியும், 2 மகன் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ். இவரது மனைவி சின்னம்மாள் (43). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

சின்னம்மாளுக்கும், சின்னராஜூக்கும் இடையே கடந்த 5 வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி தெரிய வந்ததும் கோவிந்தராஜ், தனது மனைவியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் இருவரும் கள்ளத்தொடர்பை கை விடவில்லை.

இதை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பஞ்சாயத்தில் சின்னம்மாளையும், சின்னராஜூவையும் நிறுத்தினர். பஞ்சாயத்தார் இருவரையும் பிரிந்து அவரவர் குடும்பத்துடன் வாழவேண்டும் என்று சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சின்னராஜூவும், சின்னம்மாளும் வீட்டை விட்டு சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்களது நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர்கள் கிடைக்காததால் 2 பேரும் மாயமானது தெரியவந்தது.

இந்த நிலையில் எலுமிச்சனஅள்ளியில் உள்ள ஏரிபகுதியில் சின்னம்மாளும், சின்னராஜூவும் ஒரு புளிய மரத்தின் அடியில் நேற்று வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே உறவினர்களூக்கு தகவல் தெரிவித்தனர்.

மயங்கி கிடந்த அவர்களை உடனே உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னராஜ் பரிதாபமாக இறந்தார். சின்னம்மாளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Tags:    

Similar News