செய்திகள்

ஆரோக்கியா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

Published On 2018-08-07 09:48 GMT   |   Update On 2018-08-07 09:48 GMT
ராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. #Medicalcamp

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, சித்தார் கோட்டை முஸ்லிம் தர்ம பரிபாலன சபை ஆகியவை சார்பில் சித்தார் கோட்டை முகமதியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

முகாமில் கலந்து கொண்ட 260-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு சர்க்கரை அளவு, கால் நரம்பு, கால் ரத்தக்குழாய், கால் பராமரிப்பு மருத்துவ பரிசோதனை, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஆபரே‌ஷன் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது.

டாக்டர்கள் பரணி குமார், வித்யா பிரியதர்ஷினி, சுரேந்திரன் ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். கண் ஆபரே‌ஷனுக்கு பரிந்துரைக்கப்பட்ட 15 பேர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags:    

Similar News