செய்திகள்

ஒரத்தநாடு அருகே தனியார் பஸ் மீது கல்வீச்சு- வழிவிடாததால் லோடு ஆட்டோ டிரைவர், தம்பி ஆத்திரம்

Published On 2018-08-05 17:55 GMT   |   Update On 2018-08-05 17:55 GMT
ஒரத்தநாடு அருகே தனியார் பஸ் வழிவிடாத காரணத்தால் பஸ் கண்ணாடியை உடைத்த லோடு ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து ஒரத்தநாடு நோக்கி ஒரு தனியார் பஸ் வந்தது. பஸ்சை கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த அய்யப்பன் ஓட்டி சென்றுள்ளார்.

இன்று காலை 6 மணியளவில் அந்த பஸ் ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வாசல் பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோவுக்கு வழிவிடாமல் சென்றுள்ளது. லோடு ஆட்டோவில் மீன் ஏற்றி கொண்டு நெய்வாசல் மேலத்தெருவை சேர்ந்த பிரபாகரனும், அவரது தம்பியும் வந்தனர்.

தனியார் பஸ் வழிவிடாமல் சென்றதால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதைதொடர்ந்து தனியார் பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்ற போது அதனை முந்தி சென்று பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி உடைத்துள்ளனர். இதனால் பஸ் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுதொடர்பாக தனியார் பஸ் டிரைவர் அய்யப்பன் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து லோடு ஆட்டோ டிரைவர் பிரபாகரனை கைது செய்தனர். தப்பி ஓடிய அவரது தம்பியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

வழிவிடாத ஆத்திரத்தில் தனியார் பஸ் கண்ணாடி மீது கல்வீசப்பட்ட சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப் பை ஏற்படுத்தி யுள்ளது. #tamilnews
Tags:    

Similar News