செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே சரக்கு வேனில் மணல் கொள்ளை

Published On 2018-08-04 10:38 GMT   |   Update On 2018-08-04 10:38 GMT
ஆண்டிப்பட்டி அருகே சரக்கு வேனில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். #sandrobbery

தேனி:

ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு மணல்கொள்ளையர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இருந்த போதும் கடத்தலை தடுக்க முடியவில்லை. கண்டமனூர் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான்பாஷா தலைமையிலான போலீசார் அடைக்கம்பட்டி பிரிவு பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது வேகமாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக விஜயராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். சீப்பாலக்கோட்டை- காமாட்சிபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த குப்பிநாயக்கன்பட்டி லட்சுமிபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News