search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல் கொள்ளை"

    • தமிழ்நாட்டில் மணல் கொள்ளை எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
    • மணல் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதாக தெரியவில்லை.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குடியாத்தம் அருகில் சின்ன தோட்டாளம் என்ற இடத்தில் மணல் கொள்ளையை தடுத்த அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மணல் கொள்ளை எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    மணல் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதாக தெரியவில்லை. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆற்று மணல், சவுடு மண் என அனைத்து வகையான இயற்கை வளங்களும் கட்டுப்பாடின்றி கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை தடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை உணர்ந்து தமிழகத்திற்கு மாபெரும் கேடாக மாறி வரும் மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பட்ட பகலில் கடத்தல் படுஜோராக நடைபெறுகின்றன
    • பொதுமக்கள் குற்றச்சாட்டு

    ஆரணி:

    ஆரணி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட விண்ணமங்கலம், வாழைப்பந்தல், தச்சூர், மருசூர், அகிலாண்டபுரம், உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆற்றுபடுக்கையில் இரவு பகலாக டிராக்டர் லாரிகள் மூலம் மணல் கொள்ளை நடைபெற்று வருகின்றன.

    இது சம்மந்தமாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தாலும் கண்டு கொள்ளாமல் உள்ளதால் பட்ட பகலில் மணல் கடத்தல் படுஜோராக நடைபெறுகின்றன.

    இதனால் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் போலீஸ், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிப்பதால் சில தினங்களில் 7 டிராக்டர் 5 லாரி 3 பொக்லைன் எந்தி ரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதனையடுத்து கல்பூண்டி செய்யாற்று படுக்கையில் பட்டப் பகலில் பொக்லைன் எந்திரம் மூலம் லாரி டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமிக்கு பொது மக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டன.

    ஆரணி தாசில்தார் மஞ்சுளா தலைமையில் வருவாய் துறையினர் நேரில் சென்று பொக்லைன், டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். வருவாய் துறையினரை கண்ட பொக்லைன் டிராக்டர் டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் டிராக்டரை பையூர் வி.ஏ.ஓ கார்த்தி ஒட்டி வந்து ஆரணி தாலுக்கா போலீசில் ஒப்படைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கெடிலம் அருகே வந்தபோது கெடிலம் ஆற்றில் 4 மாட்டுவண்டிகளுடன் மர்ம நபர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.
    • போலீசார் வருவதை பார்த்த மணல் அள்ளும் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் டி.எஸ்.பி மனோஷ்குமார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்த ரோந்து பணி இன்று காலை திருநாவலூர் பகுதியில் நடந்தது. அப்போது கெடிலம் அருகே வந்தபோது கெடிலம் ஆற்றில் 4 மாட்டுவண்டிகளுடன் மர்ம நபர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். உடனே டி.எஸ்.பி தலைமையி லான போலீசார் அங்கு சென்றனர்.

    போலீசார் வருவதை பார்த்த மணல் அள்ளும் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    • அரசு அனுமதியின்றி பெண்கள் மூலம் மணல் கொள்ளை நடக்கிறது.
    • மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் பகுதியில் சுமார் 4,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் வீரசோழன் பகு–தியில் பல முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதன் காரணமாக பொதுமக்கள் அந்த பகுதி–யில் நிலங்களை வாங்க ஆர்வம் காட்டி வருவதாலும் வீரசோ–ழன் பகுதியில் நிலங்களின் மதிப்பு பல லட்சங்களை தாண்டி வரும் நிலையில் கோடியை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

    வீரசோழன் பகுதியில் ஏற்கனவே வீடுகள் அனைத் தும் நெருக்கமாக இருந்து வரும் நிலையில் மேலும் இங்கு நிலம் வாங்கியோர் இன்னும் வீடுகளை கட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே அரசு மணல் அள்ள தடை விதித் துள்ள நிலையில் வீரசோ–ழன் ஆற்றுப்பகுதியில் இர–வும், பகலுமாக பெண்கள் மூலமாக தொடர்ச்சியாக சாக்குப்பை–களில் மணல் அள்ளப்பட்டு விற்பனை வருவதாக சமூக ஆர்வ–லர் கள் குற்றம் சாட்டி வரு–கின்றனர்.

    ஆற்றுப்பகுதியில் இருந்து அனுமதியின்றி சாக்குப்பை–களில் அள்ளப்பட்டு வரும் மணலானது வீடுகள் கட்டி வருபவர்களுக்கு ரூ.25 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நூறுநாள் வேலை திட்டம், விவசாய பணிகளை கைவிட்டு இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் பெண்கள் எந்த முதலீ–டும் இல்லாமல் நாளொன் றுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை சம்பாதித்து வருவதா–கவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும் இந்த மணல் கொள்ளையில் ஈடுபடுபவர் கள் பெண்களாக இருந்து வருவதால் ரோந்து வரும் போலீசாரும், நாள்தோறும் மணல் கொள்ளையில் ஈடுபடு–வோரை கண்கா–ணித்து வரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் கொஞ்சமும் கண்டுகொள்வ–தில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

    மேலும் வீடுகள் கட்டி வருபவர்களுக்கு குறைந்த விலையில் எம்.சாண்ட், பி.சாண்ட் மணல் கிடைத்தா–லும், வீடு கட்ட ஆற்று மணல் தான் சிறந்ததாக கருதப்படு கிறது. எனினும் மணல் அள்ளுவதற்கு அரசு தடை விதித்துள்ளதால் மணல் கிடைப்பதிலும் பெரும் சிக்கல் நீடித்து வரு–கிறது. மேலும் வெளியில் இருந்து விலை கொடுத்து வாங்குவதென்றால் அதிக விலைக்கு மணல் விற்பனை செய்யப்படுவதால் லாரிக–ளில் இருந்து மணல் இறக்கு–மதி செய்வதற்கும் வீட்டு உரிமையாளர்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவ–தில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீரசோ–ழன் அற்றுப்பகுதி–யில் பெண்கள் மூலமாக சாக்கு–பை–களில் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் ஆற்று மணலுக்கு மவுசு கூடியுள்ளது.மேலும் வீரசோழன் ஆற்றுப்பகு–தியில் கொரோனா காலத் திலிருந்து தற்போது வரை தொடர்ச்சியாக இங்கு மணல் அள்ளப்பட்டு வருவ–தாகவும் மேலும் இந்த செயலில் பெண்கள் ஈடு–பட்டு வருவதாகவும் தெரி–வித்த சமூக ஆர்வலர்கள் இதனால் கனிமவளம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவ–தாகவும் வேதனை தெரிவித்தனர். ஆகவே மாவட்ட கலெக்டர் உடனடியாக வீர–சோழன் ஆற்றுப்பகு–தியில் அள்ளப் பட்டு வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்க–ளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒரு லட்சம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கக்கூடிய மிகப் பெரிய ஆமூர் ஏரி உள்ளது.
    • ஏரியில் இருந்து விவசாயத்திற்கும் குடிநீருக்காகவும் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஆமூரில் சுமார் ஒரு லட்சம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கக்கூடிய மிகப் பெரிய ஆமூர் ஏரி உள்ளது.

    இந்த ஏரியில் இருந்து விவசாயத்திற்கும் குடிநீருக்காகவும் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஆமூர் ஏரி ஒட்டிய பகுதியில் காட்டுப் பள்ளி துறைமுகத்தில் இருந்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வரை 400 அடி சாலை போடப்பட்டு வருகிறது.

    இதற்காக இப்பகுதியில் உள்ள கோரைகளில் மண் எடுக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் அரசு கூறி உள்ள மூன்று அடி என்னும் அளவைவிட சுமார் 20 அடிக்கும் மேலாக கோரை மண் மற்றும் மணல் அள்ளப்படுவதால் ஏரியின் நீர் இருப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பொதுமக்கள் கோரையை முற்றுகையிட்டு லாரிகளை மடக்கி நிறுத்தினர்.

    சம்பவ இடத்திற்கு பொன்னேரி காவல்துறையினர் விரைந்து சென்று பொது மக்களுடன் சமாதானம் பேசி கோரை உரிமையாளர்களிடம் அரசு நிர்ணயித்த அளவைவிட பள்ளம் எடுக்கக் கூடாது என அறிவுறுத்தியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • அரசு வருவாய் துறையினர் மீது ஊராட்சி தலைவரும் அடியாட்களும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • மணல் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தி.மு.க.வை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 40).

    இவரும் அதே கிராமத்தை சேர்ந்த தனபால், மணி ஆகிய மூவரும் சேர்ந்து நரசிங்கபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள பச்சைமலை பகுதியில் இருந்து, இரவு நேரங்களில் ஜே.சி.பி. உதவியுடன் செம்மண் கடத்தியுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் செம்மண் கடத்துவதாக துறையூர் வட்டாட்சியர் வனஜாவிற்கு அப்பகுதி பொதுமக்கள் செல்போன் வாயிலாக புகார் தெரிவித்தனர்.

    இதனையடுத்து துறையூர் வட்டாட்சியர் வனஜா ரங்கநாதபுரத்தை சேர்ந்த, துறையூர் பகுதி வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. எந்திரம் மற்றும் டிராக்டரின் சாவியை எடுத்துக்கொண்டு, கிராமத்திற்குள் வந்துள்ளார்.

    அப்பொழுது அவரை வழிமறித்த ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், தனபால், மணி மற்றும் டிரைவர் கந்தசாமி உள்ளிட்டோர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை ஆபாசமாக பேசி திட்டி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது மண்டையை உடைத்ததோடு, அவரின் முதுகு பகுதியில் கடுமையாக பற்களைக் கொண்டு கடித்தும் வைத்துள்ளனர்.

    இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் வருவாய் ஆய்வாளரை மீட்டனர். முதலில் பெருமாள்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனை அறிந்த துறையூர் வட்டாட்சியர் வனஜா, முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை செய்து, வருவாய் ஆய்வாளர் பிரபாகரனின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

    அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் (40), தனபால், மணி, கந்தசாமி உள்ளிட்ட 4 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார், தலைமறைவான மூவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

    கடந்த மாதம் தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸிஸ் மணல் கொள்ளையை பற்றி புகாரளித்ததன் பேரில், அவரது அலுவலகத்திலேயே கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழக அரசிடம் கைத்துப்பாக்கி கேட்டது குறிப்பிடத்தக்கது.

    அதனை தொடர்ந்து மீண்டும் அரசு வருவாய் துறையினர் மீது ஊராட்சி தலைவரும் அடியாட்களும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், அரசு அதிகாரிகள் மீதே தாக்குதல் நடத்துபவர்கள், தனிநபர்கள் புகாரளித்தால் வரும் விளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    துறையூர் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
    • பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்

    வேலூர்:

    வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    அணைக்கட்டு ஒன்றியம் முழுவதும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்து, டிராக்டர்கள் மூலம் சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்துகின்றனர் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

    விவசாயிகள் காலத்திற்கு ஏற்றவாறு பயிர் செய்வதற்கு உண்டான விழிப்புணர்வை தோட்டக்கலை துறையினர் ஏற்படுத்த வேண்டும்.

    பிரதம மந்திரியின் விவசாயின் தனிநபர் கடன் ரூ.4 லட்சம் குறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு ஆர்கானிக் உரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். விவசாயிகள் ஏரியில் வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். கத்திரிக்காய், தக்காளி, செண்டுமல்லி உள்ளிட்ட உயர்ந்த வகை விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    அமாவாசை பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் கிராமப்புறங்களுக்கு வரும் அரசு டவுன் பஸ்கள் திடீரென நிறுத்தப்படுவதால் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே தொடர்ந்து அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பரமக்குடி வைகை ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.
    • இதனை கண்டித்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.

    பரமக்குடி

    மதுரைக்கு அடுத்த படியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். பரமக்குடி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு ஜே.சி.பி. மூலம் லாரிகளில் மணல் திருடியுள்ளனர்.

    கிராமப்புறங்களில் நடந்த மணல் திருட்டு தற்போது நகர்புறங்களிலும் தொடங்கிவிட்டது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக கூறி மறத்தமிழர் சேனை நிறுவனர் பிரபாகர் மற்றும் பா.ஜ.க.வினர் மணல் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஓட்டப்பா லத்தில் இருந்து தாலுகா அலுவலகம் வரை கோசமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் தாசில்தார் பார்த்தசாரதி, போலீசார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது கூடிய விரைவில் மணல் திருடியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • பகுதி சபா கூட்டத்தில் புகார்
    • நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதி

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சிக்குட்பட்ட 25, 26,27 ஆகிய வார்டுகளுக்கான பகுதி சபா கூட்டம் திருவத்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமை வகித்தார். நகர மன்ற உறுப்பினர்கள் கங்காதரன், கார்த்திகேயன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஓ. ஜோதி எம்.எல்,ஏ, பங்கேற்றார்.

    கூட்டத்தில் வார்டுகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் உவர்ப்பாக உள்ளது, பள்ளி நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு தடுக்க வேண்டும், இருசக்கர வாகனத்தில் 24 மணி நேரமும் ஆற்று மணல் கொள்ளை போவதை தடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    கூட்டத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி பேசுகையில் ஒவ்வொரு கோரிக்கைக்கும் அத்தியாவசிய முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் என். சங்கர், ஏ..ஞானவேல், நகராட்சி பணியாளர்கள் மற்றும்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×