செய்திகள்

உறுப்பு கல்லூரிகளுக்கு விடுமுறையா? - அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு

Published On 2018-07-29 19:39 GMT   |   Update On 2018-07-29 19:39 GMT
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவலுக்கு பதிவாளர் கனேசன் மறுப்பு தெரிவித்துள்ளார். #AnnaUniversity
சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதற்கிடையே, நேற்று இரவு 9 மணியளவில் கருணாநிதியின் உடல் நலத்தில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை விடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்நிலையில், உறுப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம். இது வெறும் வதந்தி தான் என அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார். #AnnaUniversity
Tags:    

Similar News