செய்திகள்

மீஞ்சூர் அருகே அரிசி ஆலையில் ரூ. 10 லட்சம் குட்கா பதுக்கல் ஊழியர் கைது

Published On 2018-07-27 06:30 GMT   |   Update On 2018-07-27 06:32 GMT
மீஞ்சூர் அருகே அரிசி ஆலையில் ரூ. 10 லட்சம் குட்கா பதுக்கல் செய்து வைத்து இருந்த ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #gutkacase

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த வைதிகை மேடு கிராமத்தில் அரிசி ஆலை உள்ளது. இங்கு ரே‌ஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது அரிசி மூட்டைகளுக்கு இடையே தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை தரும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.

இது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு துறையினர் அளித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி. சிபி.சக்கரவர்த்தி, பொன்னேரி டி.எஸ்.பி. ராஜா, மீஞ்சூர் காவல் துணைஆய்வாளர் குமார் மற்றும் மீஞ்சூர் போலீசார் சென்று சோதனை செய்தனர். அங்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனர். புகையிலை ஏற்றி வந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. பணியில் இருந்த அரிசி ஆலை ஊழியர் விஜயகுமாரை கைது செய்யப்பட்டார்.

அரிசி ஆலை உரிமையாளர் பால்ராஜ் தப்பி ஓடி விட்டார். இவரை போலீசார் தேடி வருகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #gutkacase

Tags:    

Similar News