செய்திகள்

அனுமதியின்றி மணல் கடத்திய லாரி, 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்- 8 பேர் கைது

Published On 2018-07-24 11:56 GMT   |   Update On 2018-07-24 11:56 GMT
லாலாபேட்டை காவிரி கரையில் அனுமதியின்றி மணல் கடத்தியது தொடர்பாக லாரி, 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து 8 பேரை கைது செய்தனர்.
லாலாபேட்டை:

லாலாபேட்டை காவிரி கரையில் நேற்று அதிகாலை டாரஸ் லாரி ஒன்றில் மணல் ஏற்றிக்கொண்டு இருபதாக லாலாபேட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் படி இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த போது லாரியில்3 பேர் மணல் ஏற்றி கொண்டு இருந்தனர்.

போலீசை பார்த்தும் லாரி டிரைவர் சித்தலவாயை சேர்ந்த சேட்டுமீரான் தப்பித்து ஓடி விட்டார். மற்ற 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்க்ள மேட்டுமகாதனபுரத்தை சேர்ந்த கார்த்திக்(28), அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி (39), பிள்ளபாளையத்தை சேர்ந்த பிரதீப்(31)என்பது தெரிய வந்தது. இது குறித்து லாலாபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தவுட்டுப்பாளையம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் மற்றும் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 5 மாட்டுவண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி கொண்டு வந்த தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (30), ஈஸ்வரன் (22), முத்து (24), புகளுர் ஹைஸ்கூல் மேட்டை சேர்ந்த கார்த்திக் (30), பொன்னர் (32) ஆகிய 5 பேரை கைது செய்தனர். 5 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யபட்டது. #tamilnews
Tags:    

Similar News