செய்திகள்

தலைவாசல் அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி, சரக்கு ஆட்டோ பறிமுதல்

Published On 2018-07-21 17:44 GMT   |   Update On 2018-07-21 17:44 GMT
தலைவாசல் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய டிப்பர் லாரி மற்றும் சரக்கு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தலைவாசல்:

தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பிரிவு ரோட்டில் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் பாஜிதீன், கலியமூர்த்தி ஆகியோர் மணல் கடத்தப்படுகிறதா? என வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் லாரி டிரைவர் சிறுவாச்சூரை சேர்ந்த ராகுல் என்பதும், லத்துவாடியில் உள்ள சுவேத நதியில் இருந்து மணலை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து வீரகனூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தினர். மேலும் லாரி டிரைவர் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர்.

இதே போல தலைவாசல் அருகே வேப்பம்பூண்டி பகுதியில் சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தியது தெரியவந்தது. அந்த ஆட்டோவை கிராம நிர்வாக அலுவலர் முத்தையன் மடக்கி பிடித்து, அதனை பறிமுதல் செய்து வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தினார். மணல் கடத்திய சரக்கு ஆட்டோ டிரைவர் ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News