செய்திகள்

இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வழக்கு: கைதான ரவுடிகள் கோவை சிறையில் அடைப்பு

Published On 2018-07-21 11:17 GMT   |   Update On 2018-07-21 11:17 GMT
கியூபிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை கத்தியால் குத்திய 3 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி:

ஈரோடு மாவட்ட கியூபிரிவு இன்ஸ்பெக்டர் செல்லத்துரை(45), கியூ பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு மோகனசுந்தரம்(43) ஆகியோரை பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் வைத்து 3 ரவுடிகள் கத்தியால் குத்தினர். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் நடேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னக் காமனன், ரத்தின குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து போலீசாரை கத்தியால் குத்திய போளுவாம்பட்டியை சேர்ந்த விஜய், வெங்கடேசா காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரேம்குமார்(25), மரப்பேட்டையை சேர்ந்த ‘நாத்(24) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்தவர்களை பொள்ளாச்சி ஜே.எம். எண்-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட பிரேம்குமார் மீது பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. நாத் கோவை செல்வபுரம் பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News