செய்திகள்

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் மணல் லாரிகள் பங்கேற்காது - செல்ல ராஜாமணி பேட்டி

Published On 2018-07-17 11:38 GMT   |   Update On 2018-07-17 11:38 GMT
கோரிக்கைகளை வலியுறுத்தி 20-ந்தேதி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் மணல் லாரி உரிமையாளர்கள் ஈடுபடவில்லை என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராஜாமணி கூறியுள்ளார்.
நாமக்கல்:

டீசல் விலையை குறைக்க வேண்டும், சுங்கசாவடியை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 20-ந் தேதி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் மணல் லாரி உரிமையாளர்கள் ஈடுபடவில்லை என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராஜாமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 75,000. மணல் லாரிகள் உள்ளன. இவற்றில் ஆன்லைன் முறை வந்ததால் நாள் ஒன்றுக்கு 2000 மணல் லாரிகளுக்கு மட்டுமே வாடகை கிடைப்பதால் 72,000 லாரிகள் வேலையில்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் சண்முகப்பா செல்வாக்கு இல்லாததால் தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் குமாரசாமியை கையில் போராட்டம் என அறிவித்து விட்டு சுய லாபத்திற்கு வேலை நிறுத்தத்தை விலக்கி கொள்கிறார்.

லாரி உரிமையாளர்கள் சார்பில் சண்முகப்பா 2015-ம் ஆண்டு சுங்கசாவடியை அகற்ற கோரி 30 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஆதரவு தெரிவித்தோம்.

அந்த போராட்டத்தில் சுய லாபத்திற்காக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றார். கர்நாடகாவில் செல்வாக்கு இல்லாததால் தமிழகத்தில் குமாரசாமியை வைத்துகொண்டு சுயலாபம் அடைகிறார். லாரி உரிமையாளர்கள் மீது குமாரசாமிக்கு அக்கறை இருந்தால் அனைத்து சங்கங்களையும் இணைத்து குமாரசாமி தலைமையில் நடத்தினால் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவிக்கும் என்றார். சுங்க சாவடியை அகற்றி, டீசல் விலையை குறைக்க வேண்டும். தமிழக அரசு டீசல் மீதான வேட் வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
Tags:    

Similar News