செய்திகள்

ஆதார் அட்டை பெற 3 ஆண்டுகளாக போராடிய திருநங்கை

Published On 2018-06-27 04:08 GMT   |   Update On 2018-06-27 04:08 GMT
சென்னையில் ஆதார் அட்டை பெற 3 ஆண்டுகளாக போராடிய திருநங்கைக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தீர்வு காணப்பட்டது.
சென்னை:

சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழி(வயது 33). திருநங்கையான இவர் பெற்றோரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். திருநங்கைகளுக்கான சலுகைகளை பெற விண்ணப்பித்த அவரிடம் அதிகாரிகள் ஆதார் அட்டை கேட்டனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் ஆதார் அட்டை பெறமுடியாமல் 3 ஆண்டுகளாக தவித்து வந்தார். இதுபற்றி சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஜெயந்தியை சந்தித்து கனிமொழி முறையிட்டார்.

அவரது கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி, உரிய அதிகாரிகளிடம் பேசியதை தொடர்ந்து அரசு இசேவை மையம் மூலம் கனிமொழி குறித்த அனைத்து விவரங்களையும் அதிகாரிகள் ஆதார் அமைப்பில் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச்சீட்டை வழங்கினர். சில வாரங்களில் ஆதார் அட்டை அவரது முகவரிக்கு கிடைத்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக திருநங்கை கனிமொழி நீதிபதி ஜெயந்தியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். #tamilnews
Tags:    

Similar News