செய்திகள்

ஓசூரில் தடை செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2018-06-26 17:17 GMT   |   Update On 2018-06-26 17:17 GMT
ஓசூரில் தடை செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:

ஓசூரில் தடை செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நாமல்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம் மற்றும் போலீசார் நாமல்பேட்டையில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தனர்.

அதில் அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 88 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை வைத்திருந்ததாக ஓசூர் நாமல்பேட்டையைச் சேர்ந்த கோபால் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 210 மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதே போல ஓசூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ஓசூர் பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்த கவுதம் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
Tags:    

Similar News