செய்திகள்

பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றத்தால் 25 வீடுகள் இடிந்தன - மீனவர்கள் தவிப்பு

Published On 2018-06-26 13:19 GMT   |   Update On 2018-06-26 13:19 GMT
பட்டினப்பாக்கத்தில் கடல்சீற்றம் காரணமாக கடற்கரையோர பகுதிகளில் சுமார் 25 வீடுகள் இடிந்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

மீனவர்கள் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 2 வாரங்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் வீடுகள் இடிந்து வருகிறது.

கடல் சீற்றம் தொடர்வதால் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. கடல்நீர் ஊருக்குள் புகுந்து வீடுகளை காவு வாங்கியுள்ளது.

காலை மற்றும் இரவு நேரங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் வீடுகளில் வசிப்பவர்கள் தூக்கத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக மீனவர் ஒருவர் கூறும்போது, கடல் சீற்றத்தால் ஆண்டுதோறும் வீடுகளை இழந்து பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். இதனை தடுப்பதற்காக தூண்டில் வளைவுகளை அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அரசு அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை என்றும் கூறினார்.

எனவே பட்டினப்பாக்கம் பகுதியில் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News