செய்திகள்

சோழவரம் அருகே இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி - பொதுமக்கள் அச்சம்

Published On 2018-06-18 09:34 GMT   |   Update On 2018-06-18 09:34 GMT
சோழவரம் அருகே குடிநீர் தொட்டி எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

செங்குன்றம்:

சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரக்காடு ஊராட்சியில் ஒரக்காடு பெருமாள் கோவில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக கடந்த 60 ஆண்டுக்கு முன்பு 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

தற்போது இந்த மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி முழுவதும் பழுதடைந்துள்ளதால் பயன்படுத்து வதில்லை. தூண்களில் உள்ள சிமெண்டுகள் பெயர்ந்து காணப்படுகிறது.

எனவே இந்த நீர்த்தேக்க தொட்டி எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என்று கூறி பொதுமக்கள் சோழவரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கும் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

எனவே பழுதடைந்த குடிநீர் தொட்டியை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews

Tags:    

Similar News