செய்திகள்

போடி அருகே மணல் கடத்திய லாரிகள்- டிராக்டர் பறிமுதல்

Published On 2018-06-16 11:07 GMT   |   Update On 2018-06-16 11:07 GMT
போடி அருகே மணல் கடத்த பயன்படுத்திய டிப்பர் லாரிகள் மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலசொக்கநாதபுரம்:

போடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சில இடங்களில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மட்டும் தங்கள் நிலங்களுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இதனை பயன்படுத்தி சிலர் மணல் கடத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். போலீசார் அவ்வப்போது இவர்களை கண்காணித்து அபராதம் விதித்தபோதும் மணல் கொள்ளை தொடர்ந்து கொண்டே வருகிறது.

போடி அருகே பாலார்பட்டி கூழையனூர் பகுதியில் தாசில்தார் ஆர்த்தி, ராசிங்காபுரம் ஆய்வாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த 2 டிப்பர் லாரிகள் மற்றும் டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அனுமதி இல்லாமல் மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து 2 லாரிகள் மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாகனங்களை போடி தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மணல் கடத்தி வந்த நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News