செய்திகள்

கர்நாடக அரசியல் களம் ரணகளம் - நடிகர் கமல்ஹாசன் பேட்டி

Published On 2018-05-18 21:36 GMT   |   Update On 2018-05-18 21:36 GMT
கர்நாடக அரசியல் களத்தை எப்படி பார்க்கிறீர்கள்? என்று நிருபர்கள் கேள்விக்கு மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கத்தில் மக்கள் மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகள் பிரச்சினைகளை முன்னிறுத்தி தான் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைத்தேன். எங்களை முன்நிறுத்தி அல்ல. புதிய கட்சி தங்களை முன்னிறுத்திக் கொள்ள இந்த கூட்டத்தை நடத்துவதாக அவர்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்கள்.

எங்களுடைய எண்ணம் நாளை தமிழக விவசாயிகளின் நல்வாழ்வுக்கான திட்டங்களை தீட்டுவதில், முயற்சியில் நாங்களும் பங்கு பெற்றோம் என்ற பெருமையை தேடிக்கொள்ள தானே தவிர நாங்களே இதை முன் நடத்தினோம் என்ற பெருமையை தேடிக்கொள்ள அல்ல. 40 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு கிடைத்துள்ள இந்த தீர்ப்பு இறுதி தீர்ப்பாகி விடாது.

கர்நாடகா-தமிழகத்திற்கு இருக்கும் பிரச்சினை மட்டுமல்ல. விவசாயிகளுக்கு பல பிரச்சினைகள் இருக்கிறது. கூட்டத்தில் விவாதிக்கப்படும் பிரச்சினைகளுக்கு குரல் எழுப்ப அவர்களும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கமல்ஹாசனிடம், கர்நாடக அரசியல் களத்தை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்டதற்கு ‘கர்நாடக அரசியல் களம் ரணகளம்’ என்று பதில் அளித்தார்.  #KamalHaasan #MakkalNeedhiMaiyam
Tags:    

Similar News