செய்திகள்

கர்நாடகத்தில் காங்கிரஸ் - ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்- திருநாவுக்கரசர்

Published On 2018-05-16 07:59 GMT   |   Update On 2018-05-16 07:59 GMT
கர்நாடகத்தில் அதிக இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றாலும், காங்கிரஸ்- ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018
அவனியாபுரம்:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் 38 சதவீத வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. இது பா.ஜ.க.வை விட 2 சதவீதம் அதிகம் ஆகும்.

பா.ஜ.க. 104 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை. 108 பெரிதா? 118 பெரிதா? இதனை புரிந்து கொள்ள கோவா, திரிபுரா மாநிலங்களில் உள்ளது போல, கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு எடப்பாடி-ஓ.பி.எஸ்.சுக்கு இல்லை. இருவரும் பா.ஜ.க.வுக்கு துணை போகிறார்கள். போட்டி போட்டுக் கொண்டு பா.ஜ.க.வை வாழ்த்துகிறார்கள்.



தமிழகத்தில் கல்வியின் தரம் பின்தங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

காவிரி பிரச்சினையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் தர மாட்டார்கள். இது குறித்து தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டு மூலம் கட்டாயப்படுத்த வேண்டும்.

எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ளது போல் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaElection2018 #Thirunavukkarasar
Tags:    

Similar News