செய்திகள்

ஜெயலலிதா மரணம் விசாரணை- அப்பல்லோ டாக்டர் சாந்தாராம் ஆஜர்

Published On 2018-05-09 07:04 GMT   |   Update On 2018-05-09 07:04 GMT
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர் சாந்தாராம் ஆஜரானார். #Jayalalithaa #JayaProbe #Apollo
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அப்பல்லோ டாக்டர் சாந்தாராம் ஆஜரானார்.

நீரழிவு நோய் சிறப்பு மருத்துவரான இவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களில் ஒருவர் ஆவார்.

ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு சர்க்கரை அளவு எவ்வளவு இருந்தது? எத்தனை நாட்களில் அவருக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து விசாரணை ஆணையத்தில் விளக்கம் கேட்கப்பட்டது.

இதற்கு டாக்டர் சாந்தா ராம் தேவையான விளக்கங்களை அளித்தார்.

நீதிபதி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு டாக்டர் சாந்தாராம் விரிவாக பதில் அளித்தார். அவரது வாக்குமூலம் அனைத்தும் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருந்ததாகவும் அதனால் சர்க்கரை அளவை குறைக்க என்னென்ன மாத்திரைகள் வழங்கப்பட்டது என்ற விவரத்தையும் ஆணையத்திடம் தெரிவித்தார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் ஜெயஸ்ரீகோபால், ராமச்சந்திரன் ஆகிய இருவரும் விசாரணை ஆணையத்தில் நேற்று வாக்குமூலம் கொடுத்திருந்த நிலையில் இன்று டாக்டர் சாந்தாராமிடம் மேலும் பல விவரங்கள் கேட்கப்பட்டன. #Jayalalithaa #JayaProbe #Apollo
Tags:    

Similar News