செய்திகள்

கோவையில் 3 இடங்களில் என்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சிலிங் உதவி மையம்

Published On 2018-05-03 17:48 GMT   |   Update On 2018-05-03 17:48 GMT
கோவையில் 3 இடங்களில் என்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சிலிங் உதவி மையம்
கோவை:

தமிழகத்தில் முதல்முறையாக என்ஜினீயரிங் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

அதன்படி விண்ணப்பம் பதிவு செய்தல், பதிவு செய்ய பணம் செலுத்துதல், விருப்பமான கல்லூரி தேர்வு செய்தல், தற்காலிக இடஒதுக்கீடு ஏற்றல், நிராகரித்தல், முடிவு செய்யப்பட்ட இடஒதுக்கீடு ஆணையை பெறுதல் ஆகிய அனைத்துமே இணையதளம் மூலமாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையம் மூலம் நடத்தப்பட உள்ளது. விண்ணப்பம் செய்பவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு தவிர அனைத்தையும் வீட்டில் இருந்தபடி செய்ய முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாத மாணவர்களுக்காக மாநிலம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவையில் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரி, அண்ணா பல்கலைகழகம், பீளமேடு சி.ஐ.டி. கல்லூரிகளில் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையம் செயல்படும். இந்த மையங்களில் கட்டணமின்றி மாணவர்கள் சேவையை பெறலாம்.
Tags:    

Similar News