செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன கல் வைத்து பழுக்க வைத்த பப்பாளி - மாம்பழம் பறிமுதல்

Published On 2018-04-24 08:30 GMT   |   Update On 2018-04-24 08:30 GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன கல்வைத்து பழுக்க வைத்த 2 டன் பப்பாளி, மாம்பழம் பறிமுதல் செய்து இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன கல் வைத்து பழங்கள் பழுக்க வைத்து விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் ரசாயன கல்வைத்த பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்து வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழகடையில் பப்பாளி, மாம்பழம் ரசாயன கல்வைத்து பழுக்க வைப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மீண்டும் புகார்கள் வந்தன.

இதையடுத்து இன்று காலை மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 2 கடைகளில் பெட்டி, பெட்டியாக பப்பாளி மற்றும் மாம்பழம் ரசாயன கல்வைத்து பழுக்க வைத்திருப்பதை கண்டு பிடித்தனர். மொத்தம் 2 டன் பப்பாளி, ½டன் மாம்பழத்தை பறிமுதல் செய்தனர். மேல் 2 பழக்கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

ரசாயன முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யக்கூடாது என்று வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News