செய்திகள்

பேராசிரியை விவகாரத்தில் விசாரணை கமி‌ஷன் அமைக்க கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது - துணைவேந்தர்

Published On 2018-04-22 10:13 GMT   |   Update On 2018-04-22 10:13 GMT
நிர்மலா தேவி மீதான வழக்கில் விசாரணை கமி‌ஷன் அமைக்க கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று துணைவேந்தர் செல்லத் துரை கூறினார்.
தேனி:

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை தேனி அருகே உள்ள வீரபாண்டி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிர்மலா தேவி பிரச்சினையில் விசாரணை கமி‌ஷன் அமைக்க கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியை யாரென்றே எனக்கு தெரியாது. சில அரசியல்வாதிகளின் தூண்டுதலினால் பலர் பல்கலைக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றன. இதில் அரசியல் பிண்ணனி உள்ளது. நான் துணைவேந்தருக்கு போட்டியிட்ட போது என்னோடு போட்டியிட்டவர்கள் சிலர் இது போன்ற சதியில் ஈடுபட்டிருக்கலாம்.

பேராசிரியை நிர்மலா தேவிக்கும், காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர் பணிபுரியும் தன்னாட்சி கல்லூரி மாணவியருக்கு மதிப்பெண் போடுவதில் எங்களுக்கு சம்பந்தமில்லை. இதில் பேராசிரியை, 85 சதவீத மதிப்பெண் அளிப்பதாகவும், பி.எச்.டி.க்கு சேர்த்து விடுவதாகவும் சொல்லி ஏமாற்றி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News