செய்திகள்

காரிமங்கலத்தில் மானிய விலையில் எல்.இ.டி விளக்கு விற்பனை- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2018-04-18 13:00 GMT   |   Update On 2018-04-18 13:00 GMT
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரத்தில் 608 பயனாளிகளுக்கு கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் கீழ் எல்.இ.டி விளக்கு விற்பனையை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.

காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 25 கிராமங்களில் ரூ.265 மதிப்புள்ள 9 வாட்ஸ் எல்.இ.டி விளக்குகள் மானிய விலையான ரூ.50 வீதம், பத்தாயிரம் பயனாளிகளுக்கு வழங்க தமிழக மின்வாரியம் மற்றும் இ.எஸ்.எஸ்.எல் மத்திய அரசு நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அனுமந்தபுரம் கிராமத்தில் பயனாளிகளுக்கு வாங்கும் வண்ணம் எல்.இ.டி விளக்கு பற்றி பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசார வாகனத்தை கலெக்டர் மலர்விழி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜலபதிராவ், செயற்பொறியாளர் மாதேஸ் வரன், சிவானந்தன், ரவி, உதவி செயற்பொறியாளர் இந்திராணி, உதவி பொறியாளர்கள் சங்கீதா, சங்கர்குமார் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News