செய்திகள்

பேராசிரியை விவகாரம்- கவர்னர் பன்வாரிலாலுடன் துணைவேந்தர் செல்லத்துரை சந்திப்பு

Published On 2018-04-17 07:11 GMT   |   Update On 2018-04-17 07:11 GMT
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை சந்தித்து பேசினார்.
சென்னை:

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வற்புறுத்தி செல்போனில் பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத் துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றி விசாரிக்க கவர்னர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் செல்லத் துரையும் விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.


இதற்கிடையே இன்று கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை சந்தித்தார். அப்போது பேராசிரியை விவகாரம் தொடர்பாக கவர்னரிடம் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் பேராசிரியை விவகாரத்தை கண்டித்து மாணவர் அமைப்பினர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக தகவல் பரவியது. இதையடுத்து கவர்னர் மாளிகை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News