செய்திகள்

பேராசிரியை விவகாரத்தில் விசாரணைக்குழு அமைக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது- அமைச்சர் அன்பழகன்

Published On 2018-04-17 07:01 GMT   |   Update On 2018-04-17 07:01 GMT
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்குழு அமைக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.
சென்னை:

சென்னையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரணை நடத்த கவர்னர் உத்தரவு பிறப்பித்து இருப்பது சரியான உத்தரவா?

பதில்:- கவர்னர் என்பவர் அந்த பலகலைக்கழக வேந்தர் என்ற வகையில் கவர்னர் அந்த கமிட்டியை அமைத்துள்ளார். அதன் மூலம் உண்மைத்தன்மை அறிவதற்காக விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. போலீஸ் துணை மூலமும் பேராசிரியையை கைது செய்து விசாரித்து வருகின்றனர். எனவே வேந்தர் என்ற அளவில் கவர்னர் விசாரணைக்குழு அமைக்க சட்ட திட்ட விதிகளில் இடம் உள்ளது.

கே:- இதில் முக்கிய பெரும் புள்ளிக்கு தொடர்பு இருப்பதாக சொல்கிறார்களே?

ப:- எந்த முக்கிய பெரும் புள்ளிக்கு தொடர்பு இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது.

கே:- இதில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?


ப:- ஸ்டாலின் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உண்மைத் தன்மை அறிய எந்த விசாரணை தேவையோ அதை அமைப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது.

பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர், இணை வேந்தர், வேந்தர் என்று பொறுப்புள்ள பதவிகள் உள்ளன.

பல்கலைக்கழகத்தில் ஒரு குற்றச்சாட்டு வரும் போது வேந்தர் அதற்கான கமிட்டி அமைத்து அதை ஆய்வு செய்வதற்கு உரிமை உண்டு.

இவ்வாறு அவர் கூறினார். #NirmalaDevi #Tamilnews
Tags:    

Similar News