செய்திகள்

திருவோணத்தில் போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது

Published On 2018-04-15 16:18 GMT   |   Update On 2018-04-15 16:18 GMT
போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவோணம்:

தஞ்சை மாவட்டம் திருவோணத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. பிரிவு காங்கிரஸ் தலைவராக இருக்கும பணிகொண்டான் விடுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரும் திருவோணத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். அப்போது அவர் அம்பேத்கர் சிலையை நான்தான் நிறுவினேன். அங்கு மற்றவர்கள் வந்து மாலை அணிவிக்க விடமாட்டேன் என்று கூறி திடீரென ரகளையில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், திருவோணம் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் நல்ல தம்பியிடம் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அவர் தன்னை கண்டித்த போலீசாருக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் நல்ல தம்பியை போலீசார் கைது செய்து ஒரத்தநாடு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர் பட்டுக்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News