செய்திகள்

சோளிங்கர் அருகே மீண்டும் ஆடு மேய்த்த பெண்ணை தாக்கி செயின் பறிப்பு

Published On 2018-03-24 11:50 GMT   |   Update On 2018-03-24 11:50 GMT
சோளிங்கர் அருகே மீண்டும் ஆடு மேய்த்த பெண்ணை தாக்கி செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோளிங்கர்:

சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள போளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன்நாதன் அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி கோவிந்தம்மாள்  இவர் நேற்று போளிப்பாக்கம் அடுத்த தப்பூர் கிராமம் அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிந்தார்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கோவிந்தம்மாளை திடீரென தாக்கி அவர் அணிந்திருந்த தாலி, கம்மல் உள்ளிட்ட 4 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

மர்மநபர்கள் தாக்கியதில் மயக்கமடைந்த கோவிந்தம்மாளை பொது மக்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் அதிர்ச்சியடைந்த கோவிந்தம்மாள் வாய் பேச முடியாத நிலையில் நடந்த சம்பவங்களை போலீசாரிடம் சைகை மூலம் தெரிவித்தார். இது குறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 20-ம் தேதி பாணாவரம் அருகே புதுப்பட்டு ஆரம்ப சுகாதார மையத்தில் சுகாதார ஆய்வாளராக பணி புரிந்துவந்த மல்லிகா பணி முடிந்து கணவருடன்பைக்கில் சென்ற போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் மல்லிகா கழுத்திலிருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றபோது கீழே விழுந்துபடுகாயமடைந்தார்.

இதில் சிகிச்சை பலனின்றி மல்லிகா இறந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் நடைபெற்றுள்ள நகை பறிப்புசம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News