செய்திகள்

மகளிர் குழு தலைவியை கடத்தி நகை-பணம் கொள்ளை: 2 பெண்கள் கைது

Published On 2018-03-24 09:07 GMT   |   Update On 2018-03-24 09:08 GMT
மகளிர் குழு தலைவியை கடத்தி நகை மற்றும் பணம் கொள்ளையடித்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் எம்.பி.சி. சாலையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி.மகளிர் குழு நடத்தி வருகிறார்.

வெங்கல் கிராமத்தில் உள்ள மகளிர் குழுவுக்கு பயிற்சி அளிக்க சென்றார். பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தபோது வெங்கல் நோக்கி சென்ற ஆட்டோவில் ஏறி பயணம் செய்தார்.

அந்த ஆட்டோவில் 2 பெண்கள் பயணம் செய்தனர். ஆட்டோ வெங்கல் போகாமல் திடீர் என்று கன்னிகைபேர் நோக்கி சென்றது.இதனால் ராஜேஸ்வரி கூச்சல் போட்டார்.

அப்போது ஆட்டோவில் இருந்த 2 பெண்களும் ராஜேஸ்வரியை சரமாரியாக தாக்கி அவரது முகத்தில் மிளகாய் பொடி வீசி 4 சவரன் தாலி செயினை பறித்தனர்.

2 செல்போன், ரொக்கப் பணம் ரூ.ஆயிரத்து 500 ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு ராஜேஸ்வரியை சாலை ஓரம் ஒரு பள்ளத்தில் தள்ளி விட்டு சென்று விட்டனர்.

இது குறித்து ராஜேஸ்வரி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சந்தேகத்துக்கு இடமான வகையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பெண்களை பிடித்து வந்து விசாரணை செய்தனர்.

அவர்கள் சென்னை அமைந்தகரை இந்திரா காந்தி நகர் 4-வது தெருவை சேர்ந்த நந்தினி,ஆவடி மோரை வினோ நகர் 7-வது தெருவை சேர்ந்த பரிமளா என்பது தெரிய வந்தது.

ராஜேஸ்வரியிடம் தாலி செயின் பறிப்பில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர். பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தாலி செயின் செல்போன்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.அந்த பெண்கள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

மாஜிஸ்ரேட்டு உத்தரவின்பேரில் இரண்டு பெண்களையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவான ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர். #tamilnews

Tags:    

Similar News