செய்திகள்

தேனி மாவட்ட குடிநீருக்காக பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

Published On 2018-03-21 10:33 GMT   |   Update On 2018-03-21 10:33 GMT
தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:

கடந்த 4 வருடங்களாக போதிய அளவு பருவமழை பெய்யாததால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு போக நெல்சாகுபடி மட்டுமே நடைபெற்றது. இந்த ஆண்டும் பருவ மழை குறைவாகவே பெய்தது. இதனால் அணைகளின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது.

கடந்த வாரம் புயல் சின்னம் காரணமாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. தற்போது மழை குறைந்துள்ளதால் நீர் வரத்தும் குறைவாகவே வந்து கொண்டு இருக்கிறது. பெரியாறு அணையின் நீர் மட்டம் 113.60 அடியாக உள்ளது. 31 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

தேனி மாவட்ட மக்கள் குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 200 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் அது இன்று 225 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

வைகை அணை நீர் மட்டம் 32.32 அடியாக உள்ளது. 17 கன அடி நீர் வருகிறது. 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 31.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 73.47 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
Tags:    

Similar News