செய்திகள்

பிரிந்து வாழ்ந்த 1,500 தம்பதிகளை சேர்த்து வைத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

Published On 2018-03-21 03:11 GMT   |   Update On 2018-03-21 03:11 GMT
பிரிந்து வாழ்ந்த 1,500 தம்பதிகளை சேர்த்து வைத்துள்ள சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி சென்னை போலீசில் தலைச்சிறந்த சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜெயமணி (வயது 56). இவர் பிரிந்து வாழ்ந்த 1,500 தம்பதிகளை சேர்த்து வைத்துள்ளார். இதனால் சென்னை போலீசில் தலைச்சிறந்த சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக மகளிர் தினத்தையொட்டி, இவர் சிறந்த சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி உள்ளார். மேலும், தனது சொந்த செலவில் 15 அனாதை பிணங்களையும் அடக்கம் செய்துள்ளார். பெற்றோரால் கைவிடப்பட்ட 2 குழந்தைகளை தத்து எடுத்து தனது சொந்த செலவில் படிக்க வைத்துள்ளார். இவரது சமூக சேவையை பாராட்டி, பல்வேறு சமூக அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி உள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று இவரை தனது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார். இவரது கணவர் வெளிநாட்டில் டிரைவராக வேலைபார்க்கிறார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். போலீஸ்வேலையில் சேர்ந்து 32 ஆண்டுகள் பணியாற்றி வருவதாக ஜெயமணி தெரிவித்தார்.   #tamilnews
Tags:    

Similar News