செய்திகள்

நீர் பிடிப்பில் மீண்டும் மழை - பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Published On 2018-03-15 09:29 GMT   |   Update On 2018-03-15 09:29 GMT
நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:

வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதே போல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் நேற்று 113.30 அடியாக இருந்த நிலையில் இன்று 113.40 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை வரை 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இன்று காலை 294 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

வைகை அணையின் நீர் மட்டம் 32.25 அடி. வரத்து 40 கன அடி. திறப்பு 60 கன அடி. மஞ்சளாறு நீர் மட்டம் 31.95 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் நேற்று 59.86 அடியாக இருந்தது இன்று காலை 60.02 அடியாக உயர்ந்தது. வரத்து 4 கன அடி. திறப்பு 3 கன அடி. சண்முகா நதி அணையின் நீர் மட்டம் 26.25 அடி.

பெரியாறு 2.2, தேக்கடி 4.6, கூடலூர் 3, சண்முகா நதி அணை 4, உத்தமபாளையம் 4.4, வீரபாண்டி 5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. #tamilnews

Tags:    

Similar News