செய்திகள்
சென்னை கொண்டுவரப்பட்டுள்ள ஜெயலலிதா சிலை

ஜெயலலிதா முழு உருவ சிலை சென்னை கொண்டுவரப்பட்டது

Published On 2018-02-17 07:52 GMT   |   Update On 2018-02-17 07:52 GMT
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் வைப்பதற்காக ஜெயலலிதா முழு உருவ சிலை சென்னை கொண்டுவரப்பட்டது.
சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் ஜெயலலிதா சிலை வைக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி சிலையை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஜெயலலிதா சிலை நிறுவும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. எம்.ஜி.ஆர் சிலை அருகே ஜெயலலிதா சிலை வைக்கப்படுகிறது. ஒரே பீடத்தில் 2 சிலைகளும் வைக்கப்பட உள்ளன.

இதற்காக எம்.ஜி.ஆர் சிலை அருகே பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. தற்போது பீடம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே தலைமை கழகத்தில் வைப்பதற்காக ஜெயலலிதா சிலை தயாராகி விட்டது. ஆந்திர மாநிலம் குண்டூரில் இந்த சிலை வடிவமைக்கும் பணிகள் நடந்தன. முழு உருவ வெண்கல சிலையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜெயலலிதா சிலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு வேன் மூலம் சிலை அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கொண்டுவரப்பட்டது. இது பாதுகாப்பாக அ.தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 21-ந்தேதி அந்த சிலையை பீடத்தில் நிலைநிறுத்தி நிறுவ உள்ளனர். ஜெயலலிதா பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி சிலை திறக்கப்படுகிறது. #tamilnews



Tags:    

Similar News