செய்திகள்

மதுரை மாநகராட்சியில் வருகிற 28-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

Published On 2018-01-23 14:27 GMT   |   Update On 2018-01-23 14:27 GMT
மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகிற 28-ந்தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
மதுரை:

மதுரை மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குழந்தை செல்வங்களை தாக்கி உடலை ஊனமாக்கும் கொடிய இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்கும் வகையில் கடந்த 21 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிற தீவிர இளம்பிள்ளை வாத நோய் ஒழிப்பு முகாம்களைப் போல. போலியோ சொட்டு மருந்து முகாம் வருகின்ற 28-ந் தேதி முதல் தவணை நடைபெற உள்ளது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட அதே இடங்களில் இந்த ஆண்டும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த போலியோ சொட்டு மருந்து 28-ந் தேதி இந்தியா முழுவதும் வழங்கப்படுகிறது.

இந்த சொட்டு மருந்து தரம் வாய்ந்தது என உலக சுகாதார நிறுவனத்தால் சான்று அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தை கொடுப்பதால் பக்க விளைவுகள் உண்டாகாது. எனவே வீட்டில் உள்ள 5 வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளையும் இதற்கு முன்பு எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் இந்த முறையும் 28-ந் தேதி அருகில் உள்ள மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், மகப்பேறுமனைகள், மருந்தகங்கள். சத்துணவுக் கூடங்கள், பள்ளிகள் மற்றும் இதற்கென அமைக்கப்பட்டு உள்ள போலியோ சொட்டு மருந்து முகாம்களில் தவறாது குழந்தைகளை அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்தினை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News