செய்திகள்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சுஷ்மா சுவராஜ் சாமி தரிசனம்

Published On 2018-01-20 07:25 GMT   |   Update On 2018-01-20 07:25 GMT
காரைக்கால் திருநள்ளாறில் உள்ள சனீபகவான் ஸ்தலமான தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் சாமி தரிசனம் செய்தார். #sushmaswaraj

காரைக்கால்:

காரைக்கால் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார்.

அதன்பின்னர் அவர் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் இரவு தங்கினார். அவருடன் அவரது மகளும் தங்கியிருந்தார்.

இன்று காலை 6 மணிக்கு சுஷ்மா சுவராஜ் தனது மகளுடன் காரைக்கால் திருநள்ளாறில் உள்ள சனீபகவான் ஸ்தலமான தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவர்களை அமைச்சர் கமலக்கண்ணன் கோவில் நிர்வாக அதிகாரி விக்கிரந்த் ராஜா, கட்டளை தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் வரவேற்றனர்.

அதன்பின்பு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் அங்குள்ள விநாயகர், சுப்பிரமணியர், அம்மன் சன்னதிக்கு சென்று வழிபட்டார். பின்னர் சனீஸ்வரபகவான் சன்னதியில் நடந்த நவகிரக சாந்தி ஹோமத்தில் தனது மகளுடன் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார்.

தொடர்ந்து சனிபக வானுக்கு விசே‌ஷ ஆராதனை சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் சுஷ்மா சுவராஜ் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். 8.45 மணி வரை கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அவர் வெளியே வந்தார்.

இந்தநிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, ராதாகிருஷ்ணன் எம்.பி, கலெக்டர் கேசவன், பா.ஜ.க.மாநில தலைவர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். #sushmaswaraj #tamilnews

Tags:    

Similar News