செய்திகள்

உடுமலையில் மளிகை கடையில் தீ விபத்து

Published On 2018-01-12 16:17 GMT   |   Update On 2018-01-12 16:17 GMT
உடுமலையில் மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

உடுமலை:

உடுமலை ராமசாமி நகரை சேர்ந்தவர் தமிழ் செல்வம் (50). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். கடந்த 20 வருடங்களாக கடையை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி சென்றார்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமள வென்று பரவ தொடங்கியது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கடை உரிமையாளர் தமிழ் செல்வத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் கடைக்கு விரைந்து வந்தார். பின்னர் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனாலும் கடையில் இருந்த மளிகை பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதன் மதிப்பு ஒன்றரை லட்சம் இருக்கும் என தெரிகிறது.

மளிகை கடையில் தமிழ் செல்வம் தனது ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வாகன ஆர்.சி. புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வைத்து இருந்தார். அவைகளும் தீயில் கருகி விட்டது.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து உடுமலை இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News