செய்திகள்

சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

Published On 2018-01-12 06:35 GMT   |   Update On 2018-01-12 06:35 GMT
குட்கா விவகாரம் பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதால் தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #MKStalin

சென்னை:

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரில் இன்று குட்கா விவகாரம் தொடர்பாக பேச எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளார். இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் இருந்து வெளியேறிய ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், குட்கா விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டசபையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது. குட்கா வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரி தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும், என கூறினார். 

ஏற்கனவே கடந்த புதன்கிழமையும் குட்கா விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து  தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #TNAssembly #MKStalin #tamilnews
Tags:    

Similar News