செய்திகள்

மேட்டூர் அணையில் முழுவதுமாக வெளியில் தெரியும் நந்தி சிலை

Published On 2018-01-08 11:42 GMT   |   Update On 2018-01-08 11:42 GMT
நீர்மட்டம் 56 அடியாக குறைந்ததால் மேட்டூர் அணையில் உள்ள நந்தி சிலை முழுவதும் வெளியே தெரிகிறது.
மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து 200 கன அடிக்கும் குறைவா இருந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது.

இதற்கிடையே நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு 2 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று காலை 104 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 162 கன அடியாக இருந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68 அடிக்கும் குறையும் போது பண்ணவாடி நீர்தேக்க பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் இரட்டை கோபுரம், ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் நந்திசிலை ஆகியவை வெளியே தலை காட்டும்.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56 அடியாக குறைந்ததால் பீடத்தின் மேல் உள்ள நந்தி சிலை முழுவதும் வெளியே தெரிகிறது. அதே போல கிறிஸ்தவ கோபுரமும் தண்ணீரின் மேலே அழகாக காட்சி அளிக்கிறது.

இந்த நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ கோபுரங்களை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இனி வரும் நாட்களில் குடும்பத்துடன் வந்து பார்த்து செல்வார்கள்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 56.47 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 162 கன அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் நீர்மட்டம் குறையும் போது நந்தி சிலையின் பீடமும் முழுவதும் வெளியில் தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News