செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்: கலெக்டர் தகவல்

Published On 2017-12-28 17:07 GMT   |   Update On 2017-12-28 17:07 GMT
பெரம்பலூர் மாவட்ட த்தில் 29.12.2017 அன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் வருவாய் கிராமங்களின் விபரம் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட த்தில் 29.12.2017 அன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் வருவாய் கிராமங்களின் விபரம் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்காக அம்மா திட்டம் தமிழக அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத் திட்டத்தின்படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில், வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடிச் சென்று அவர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றது. 

இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல்கள், ஆதார் அட்டைகள் பெற பதிவுகள் செய்தல், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் ஆகியவை அன்றைய தினமே உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக முகாம் நடைபெறும் இடங்களில் இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி, பிரிண்டர் ஆகிய வசதிகள் செய்யப்பட உள்ளன. முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படுகின்றன. 

உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். 29.12.2017 அன்று பெரம்பலூர் வட்டத்தில் சத்திரமனை, வேப்பந்தட்டை வட்டத்தில் பாண்டகப்பாடி, குன்னம் வட்டத்தில் மழவராயநல்லூர் மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் கொளக்காநத்தம் ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். 

இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News