செய்திகள்

ஆன்-லைன் வர்த்தகத்தில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி: பெண் உள்பட 3 பேர் கைது

Published On 2017-12-23 07:16 GMT   |   Update On 2017-12-23 07:16 GMT
ஆன்-லைன் வர்த்தகத்தில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி பெண் உள்பட 3 பேர் கைது

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரிடம் ஆவடி பகுதியைச் சேர்ந்த சரவணன்.

அவரது மனைவி லட்சுமி, சரவணனின் தந்தை நடராஜன் உறவினர்கள் குரு விஸ்வநாதன், லிடியா கிரேஸ், சுப்பிரமணி, சரண் ராஜ் ஆகியோர் இணைய தளம் வர்த்தகம் தொழில் செய்து வருவதாக கூறி முருகானந்தமிடம் இருந்து பணம் வாங்கினர்.

இந்த நிலையில் அவர்கள் மீது முருகானந்தம் பணம் இரட்டிப்பாக ரூ. 96 லட் சத்து 80 ஆயிரம் திருப்பித் தரப்படும் என கூறி நம்பிக்கை மோசடி செய்ததாக திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தியிடம் புகார் கொடுத்தார்.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து குற்றப் பிரிவு துணை சூப்பிரண்டு கண்ணப்பன், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், விஷ்வநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து குருவிஸ்வநாதன், லிடியா கிரேஸ், சரண்ராஜ் ஆகியோரை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News