செய்திகள்

வேகமாக குறைந்து வரும் பெரியாறு அணை நீர் மட்டம்

Published On 2017-12-21 10:25 GMT   |   Update On 2017-12-21 10:25 GMT
நீர் பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்ததால் பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
கூடலூர்:

பருவ மழை பொய்த்துப் போனதால் கடந்த ஆண்டு பெரியாறு அணை நீர் மட்டம் உயரவில்லை. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு போக சாகுபடி மட்டுமே நடந்தது. மற்ற பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு ஓரளவு பருவ மழை கை கொடுத்துள்ளது. எனவே அணையின் நீர் மட்டம் 130 அடி வரை எட்டியது. கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்து விட்டது. நேற்றும் முற்றிலும் மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 124.70 அடியாக உள்ளது. அணைக்கு 222 கன அடி நீர் வருகிறது. 1,400 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. நேற்று 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று அது குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைகை அணை நீர் மட்டம் 48.29 அடியாக உள்ளது. அணைக்கு 1,029 கன அடி நீர் வருகிறது. பாசனம் மற்றும் குடிநீருக்காக 1,710 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

மஞ்சளாறு அணை நீர் மட்டம் 45.75 அடியாக உள்ளது. 25 கன அடி நீர் வருகிறது. 70 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 101.02 அடியாக உள்ளது. அணைக்கு 3 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
Tags:    

Similar News