செய்திகள்

ஒகி புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: எடப்பாடி பழனிசாமி

Published On 2017-12-14 00:35 GMT   |   Update On 2017-12-14 03:01 GMT
‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண பணிகளை துரிதப்படுத்த ஆய்வுக்கூட்டம் நடத்தினேன். காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான பல அறிவிப்புகளையும் வெளியிட்டேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் கள ஆய்வு மேற்கொண்டபோது, ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என என்னிடம் பலர் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையினை ஏற்று, ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.4 லட்சம் நிவாரண நிதியுதவியுடன், கூடுதலாக ரூ.6 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், ஆக மொத்தம் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். 
Tags:    

Similar News