செய்திகள்

ஆர்.கே.நகர் தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு

Published On 2017-12-11 11:59 GMT   |   Update On 2017-12-11 11:59 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடந்தது.
சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 59 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதற்காக 50 இடங்களில் 256 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் இந்த தொகுதியில் உள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமி‌ஷனருமான கார்த்தியேன் தலைமை தாங்கினார். பொது பார்வையாளர் அல்கா ஸ்ரீவஸ்தவா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு கட்டுப்பாட்டு கருவி, 4 வாக்குப்பதிவு எந்திரம், 1 ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. 25 சதவீதம் இருப்பில் தயார் நிலையில் வைக்கப்படும்.

அதன்படி 1,300 வாக்குப்பதிவு எந்திரங்கள், 360 கட்டுப்பாட்டு கருவிகள், 360 ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு எந்த வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்திட வேண்டும் என்பதனை கணினி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
Tags:    

Similar News