செய்திகள்

ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் சேலத்தில் குமரி ஆனந்தன் பேட்டி

Published On 2017-12-10 11:23 GMT   |   Update On 2017-12-10 11:23 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் நிச்சியம் வெற்றி பெறுவார் என்று குமரி ஆனந்தன் கூறினார்.

சேலம்:

சேலம் நகரவை தலைவராக ராஜாஜி இருந்தபோது முதன் முதலாக மதுவிலக்கை கொண்டு வந்தார். இதன் 100-வது ஆண்டை யொட்டி சேலத்தில் இன்று விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சி நடந்தது.

சேலம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் தொடங்கி வைத்தார்.

இந்த நடைபயணம் சேலம் புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள ராஜாஜி சிலையின் அருகே முடிவடைந்தது. பின்னர் ராஜாஜி சிலைக்கு குமரி ஆனந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும். அரசியல் கட்சியினர் படிப்படியாக பூரண மது விலக்கு அமல்படுத்தவோம் என்று கூறி விட்டு மீண்டும் மதுக்கடைகளை திறந்து தெய்வத்திற்கும், மக்களுக்கும் விரோதியாக செயல்படுகின்றனர்.

அண்ணா பெயரை வைத்துக் கொண்டு மதுக்கடைகளை திறப்பதால் அது புத்திசாலிதனமானது இல்லை. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றி பெறுவார். எனவே தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் நிச்சியம் வெற்றி பெறுவார்.

உள்ளாட்சி மற்றும் மற்ற தேர்தல்களில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறுபவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு குமரி ஆனந்தன் கூறினார்.

Tags:    

Similar News