செய்திகள்

சென்னையில் திருநாவுக்கரசர், சிதம்பரம் பங்கேற்கும் காங்கிரஸ் கருத்தரங்கம் 26-ந்தேதி நடக்கிறது

Published On 2017-11-24 09:54 GMT   |   Update On 2017-11-24 09:54 GMT
சென்னையில் திருநாவுக்கரசர், சிதம்பரம் பங்கேற்கும் காங்கிரஸ் கருத்தரங்கம் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ராணி சீதை ஹாலில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை:

சமகால அரசியலில் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் தாக்கங்களும், தேவைகளும் என்ற தலைப்பில் காங்கிரஸ் சார்பில் கருத்தரங்கம் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் ராணி சீதை ஹாலில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் ஏற்பாட்டில் நடக்கும் இந்த கருத்தரங்கிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்குகிறார்.

மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், சிவ.ராஜசேகரன், அரும்பாக்கம் வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில் எழுத்தாளர் வே.மதிமாறன், திராவிடர் கழக வக்கீல் அருள் மொழி, அந்தோணி, அழகேச பாண்டியன், கவிஞர் சுகிர்தா ராணி, மா.கிறிஸ்டோபர் ஆகியோர் கருத்துரை வழங்குகிறார்கள்.

விழாவில் அம்பேத்கர், பெரியார் விருதுகளை திருநாவுக்கரசர், ப.சிதம்பரம் ஆகியோர் வழங்குகிறார்கள். செல்வி ரவிந்திரன், போலீஸ் ஐ.ஜி.மவுரியா, லலிதா சுப்பிரமணியன், எழுத்தாளர் அம்பேத்கர் பிரியன் ஆகியோர் விருது பெறுகிறார்கள். கக்கனின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை ப.சிதம்பரம் வெளியிட திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பெற்றுக் கொள்கிறார்கள்.

விழாவில் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி எம்.பி. ரஞ்சன் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News