செய்திகள்

தேர்வு விடைத்தாள்கள் திருத்த சுமார் ஆயிரம் பேராசிரியர்களுக்கு தடை: அண்ணா பல்கலை

Published On 2017-11-22 11:04 GMT   |   Update On 2017-11-22 11:04 GMT
பொறியியல் மாணவர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியிலிருந்து 1169 பேராசிரியர்களை விடுவித்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணியை பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் பேராசிரியர்கள் செய்கின்றனர். தேர்வு முடிவுகளில் தங்களக்கு கிடைத்த கிரேடுகளில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கின்றனர்.

அப்படி விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் போது, மதிப்பென் மாறுபாடு ஏற்படும் பட்சத்தில் விடைத்தாளை திருத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தவறுகளுக்கு காரணமான 1169 பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்த தடை விதித்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விடைத்தாள் திருத்துவதில் மெத்தனமாக செயல்பட்டதாக கூறி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News