செய்திகள்

ஊட்டி படகு இல்ல மேலாளர் சஸ்பெண்டு

Published On 2017-11-22 09:42 GMT   |   Update On 2017-11-22 09:43 GMT
சுற்றுலா பயணிகளுக்கு படகு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததால் ஊட்டி படகு இல்ல மேலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
ஊட்டி:

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள பழமை வாய்ந்த ஏரியில் படகு சவாரி செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்த சமயங்களில் பல மணி நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர்.

இதன் மூலம் சுற்றுலா துறைக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வந்தது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு படகு ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதன் மூலம் அதிகாரிகள் சிலர் பல லட்சம் சுருட்டியதாகவும் கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் ஊட்டி படகு இல்ல மேலாளராக பணியாற்றி வந்த தினேஷ் திடீரென சஸ்பெண்டு செய்யப்பட்டடு உள்ளார்.

இந்த சம்பவம் சுற்றுலாதுறை அதிகாரிகள் மட்டுமின்றி சுற்றுலாத்துறை ஊழியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News