செய்திகள்

திருச்சியில் இருந்து தென்காசிக்கு மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்

Published On 2017-11-20 10:21 GMT   |   Update On 2017-11-20 10:21 GMT
திருச்சியில் இருந்து தென்காசிக்கு மணல் கடத்திய 5 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சந்தோஷ் ஆகியோர் ரோந்து சென்றனர்.

அப்போது திருச்சியில் இருந்து 5 லாரிகள் அதிவேகமாக வந்தன. அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை மேற் கொண்டனர். 5 லாரிகளிலும் ஆற்றுமணல் கடத்தப்படுவது தெரியவந்தது. அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லை.

எனவே அந்த லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆற்று மணல் தென்காசிக்கு கடத்தப்படுவது தெரியவந்தது.

லாரியை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், கீழ வள்ளியூரைச் சேர்ந்த இளையராஜா, திருச்சியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, செந்தில் குமார், குளித்தலையைச் சேர்ந்த அரவிந்தன், சரவணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Tags:    

Similar News