செய்திகள்

போயஸ் தோட்டத்தில் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு

Published On 2017-11-17 21:20 GMT   |   Update On 2017-11-17 21:20 GMT
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை இன்று அதிகாலை நிறைவடைந்தது.
சென்னை:

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக பதவி வகித்து வந்தவர் ஜெயலலிதா. இவர் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்து வந்தார். இவரது தோழியாக இருந்த சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குடும்பங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். முதல் கட்டமாக ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் பயன்படுத்திய அறையில் சோதனை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலாவின் அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த அதிரடி சோதனையில் 10-க்கு மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து நான்கு மணி நேரத்துக்கு மேலாக அவர்கள் சோதனை செய்தனர். அதன்பின் அதிகாலை 2 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். போயஸ் தோட்டத்தில் இருந்து இரண்டு பென் டிரைவ்கள், ஒரு லேப்டாப் மற்றும் ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

போயஸ் தோட்டத்தில் நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News