செய்திகள்

புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயர் பலி

Published On 2017-10-01 05:42 GMT   |   Update On 2017-10-01 05:42 GMT
புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த என்ஜினீயர் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சலுக்கு அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரி, ஜிப்மர் ஆஸ்பத்திரி மற்றும தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட புதுவை திருவள்ளுவர் நகர் விஜய லட்சுமி (வயது 50), சாரம் ஞானப்பிரகாசம் நகர் பகுதியை சேர்ந்த இந்துமதி (26), கொட்டுப்பாளையம் காவலாளி கேசவ் ஆகியோர் உயிர் இழந்துள்ளனர்.

இந்த நிலையில் புதுவை முதலியார் பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் சரவணன் (23) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய உடல்நிலை மோசமானதை தொடர்ந்து புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சரவணன் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிர் இழந்தார். இதனால் புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News